வரலாறு காணாத தாக்குதல்; சிரியாவில் 100 பேர் பலி

வரலாறு காணாத தாக்குதல்; சிரியாவில் 150 பேர் பலி
 | 

வரலாறு காணாத தாக்குதல்; சிரியாவில் 100 பேர் பலி


சிரியாவில் அரசு படைகள் கடந்த 24 மணி நேரத்தில் கூட்டா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 20 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு கூட்டா பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது சிரியா அரசு. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 200 பேர் இதில் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் சிரியா போரில் நடத்தப்படும் மிக மோசமான தாக்குதல் இதுவென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிரியா தலைநகர் டமாஸ்கஸின் அருகே உள்ள பகுதிகளில் அரசு படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல்களில் பலியாகி வருபவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP