துருக்கி ஹெலிகாப்டர் சிரியாவில் நொறுங்கியது: 2 பேர் பலி

துருக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சிரியாவில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்ததாகத் துருக்கி பிரதமர் பின்னாலி எல்ட்டிரீம் தெரிவித்துள்ளார்.
 | 

துருக்கி ஹெலிகாப்டர் சிரியாவில் நொறுங்கியது: 2 பேர் பலி

துருக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சிரியாவில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்ததாகத் துருக்கி பிரதமர் பின்னாலி எல்ட்டிரீம் தெரிவித்துள்ளார். 

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, சிரியா உள்ளிட்ட நாடுகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் தாக்குதல் நடத்த வந்த ரஷ்ய போர் விமானம் ஒன்றைக் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்தநிலையில், நேற்று கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த வந்த துருக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கிளர்ச்சியாளர்கள் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதைத் துருக்கி பிரதமர் பின்னாலி எல்ட்டிரீம் உறுதி செய்துள்ளார். 

இந்த ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதா என்பது தெரியவில்லை. ராணுவ அதிகாரிகள் இது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். அவர்கள் உடலை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. 

கடந்த ஜனவரி 20ம் தேதி, சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளை அழித்தொழிப்பது என்று ஆப்பரேஷன் ஆலிவ் பீச் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியது துருக்கி. இதுவரை 1100-க்கும் மேற்பட்ட அமெரிக்க ஆதரவு ஒ.பி.ஜி பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களைக் கொன்றுள்ளதாகத் துருக்கி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நேற்றைய விபத்துடன் சேர்த்து 20 துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP