ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் விலகல்

கடும் எதிர்ப்புகளையும் மீறி, ஈரான் அணுசக்தி திட்டங்களை கட்டுக்குள் கொண்டு வரும் சர்வதேச ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

2015ம் ஆண்டு, ஈரான் நாட்டின் அரசுடன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அணுஉலைகள் மற்றும் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தை கட்டுக்குள் கொண்டு வர ஒப்பந்தம் கையெழுத்திட்டன. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பு என கூறி வந்தார். 

ஒப்பந்தத்தில் உள்ள எந்தவொரு குறிப்பிட்ட அம்சங்களையும் விமர்சிக்காமல், ஒட்டுமொத்தமாக அந்த ஒப்பந்தமே 'ஆபத்தானது', 'வேலைக்கு ஆகதாது' என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ட்ரம்ப். அதிபர் ஒபாமா தலைமையில் கையெழுத்திட பட்டதால், இதை அவர் எதிர்ப்பதாக பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறி வருகிறார்.

ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதுகுறித்து பலமுறை எச்சரித்தும், ட்ரம்ப் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து, மற்ற நாடுகளுடன் அணு ஆயுத ஒப்பந்தை நடைமுறை படுத்துவது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP