கிழக்கு நோக்கி தொழும் நேரம் !

இந்தியாவின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, தொழில்துறையில் முதலீடு செய்வது ஆகியவற்றிக்கு ஜப்பான் முன்வந்துள்ளது. இருநாடுகளின் ஒத்துழைப்பு கிழக்கை நோக்கி தொழும் நேரம் வந்து விட்டது என அறியலாம். இது குறித்த ஒரு சிறப்பு கட்டுரை...
 | 

கிழக்கு நோக்கி தொழும் நேரம் !

கடந்த நுாற்றாண்டில் உலக நாடுகள் எல்லாம் பொருளாதாரத்திற்காக மேற்கு நாடுகளையே நோக்கி  தொழ வேண்டியிருந்தது. அந்த போக்கை மாற்றி அந்த நாடுகளை கிழக்கு நோக்கி திருப்பிய பெருமை சீனாவை சேரும். கடந்த 1978ம் ஆண்டில் பொருளாதார சீர்திருத்தத்தை தொடங்கிய சீனா, அதன் உச்சத்தை தற்போது அறுவடை செய்துள்ளது. சீனாவில் 3.12 டில்லியன் டாலர் அன்னியசெலாவணி உள்ளது. ஜிடிபி அடிப்படையில் உலக நாடுகளின் வரிசையில் 2ம் இடத்தை  அந்த நாடு பிடித்துள்ளது. 2017ம் ஆண்டு புள்ளிவிபரப்படி உலக பொருளாதாரத்தில் 18.2 சதவீதம் சீனாவின் பிடியில் உள்ளது.

இப்படி சீனா வளர்வது நல்லதா என்றால் நமக்கு நல்லதல்ல என்பதே உண்மை. இலங்கை சீனா கொடுத்த கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் அந்தநாட்டின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. இது போன்ற சிக்கலில் தான்  பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சீனாவிடம் சிக்கி உள்ளன.

இந்த சூழ்நிலை இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைவலி கொடுக்கும். தற்போது சீனாவின்பட்டுப்பாதை திட்டத்திற்கு செக் வைத்தாலும், எதிர்காலத்தில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் நெருக்குதல்கள் காரணமாக  இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற சூழ்நிலையில்தான் இந்தியா, பொருளாதாரத்தில் தன்னை வளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் உலக நாடுகள் சீனாவிடம் சரணடையாமல் இந்தியாவின தயவை நாட வேண்டி வரும்.

கடவுள் புண்ணியத்தில் நேரு, இந்திராவிற்கு அடுத்து, ஆளுங்கட்சி வசம் மிகப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சியும், தேசத்தை பற்றி முழு நேரமும் சிந்திக்கும் பிரதமரும் தற்போதுதான் இந்தியாவிற்கு கிடைத்துள்ளார்.

சீனாவின் ஸி ஜிங் பிங் அவரின் நடவடிக்கைகளின் அடிநாதமாக  உற்பத்தியை  அதிகரிப்பதன் மூலம் சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதே போல தான் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வரும் மேக் இன் இந்தியா திட்டமும். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவற்றை  விரைந்து செயல்படுத்த வேண்டும். இதற்கு சிறிய நாடாக மட்டுமின்றி வளம் கொழிக்கும் விதமாகவும் இருந்து வரும் ஜப்பான் நம்மோடு இருக்க வேண்டும் என்ற மோடியின் எண்ணம் சரியாக இருக்கலாம். இந்தியா ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக சீனாவும் தான் ஆண்டுதோறும் உச்சமாநாட்டை நடத்தி வருகிறது.  இருந்தபோதிலும் உச்சமாநாடுகளில் கலந்துகொள்வதையும் கடந்து, கடந்த 4.5 ஆண்டுகளில் மோடி 12 முறை ஜப்பான் சென்று வந்துள்ளார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

கிழக்கு நோக்கி தொழும் நேரம் !

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி ஜப்பான் சென்ற போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த பயணத்தின் நோக்கமே இந்தியா ஜப்பான் இணைந்து இந்திய பசிபி்க் அமைந்துள்ள நாடுகள் மற்றும், ஆப்பிரிகா நாடுகளை பொருளாதார ரீதியில் முன்னறே்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்தில் தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல கையெழுத்தானது. ஆப்பிரிகாவின் உட்கட்டபைமைப்பை மேம்படுத்த  உதவ வேண்டும் என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா தன் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள மேலை நாடுகளையே சார்ந்திருக்காமல், கீழை நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்தும் கொள்கையாக “லுக் ஈஸ்ட் பாலிசி“ என்பது 1991-96 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்து வந்த நரசிம்மராவ் சிந்தனையில் உருவான ஒன்றாகும். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபின் அந்தக் கொள்கை மேம்படுத்தப்பட்டு ஆக்ட் ஈஸ்ட் பாலிசியாக மாற்றப்பட்டுள்ளது. அதில் மோடியின் 10 வித செயல்திட்டத்தை ஏற்று ஆப்பிரிக நாடுகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சியில் பங்கு பெறுபவது போன்றவறை இரு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறப்பிடத்தக்க விஷயங்கள்.

இதற்கு பிரதிபலனாக இந்தியாவின் உட்கட்ட.மைப்பு வசதியை மேம்படுத்துவது, தொழில்துறைகளில் முதலீடு செய்வன ஆகியவற்றிக்கு ஜப்பான் முன்வந்துள்ளது.

கிழக்கு நோக்கி தொழும் நேரம் !

இதில் ரோபட் தொழில்நுட்பம் குறித்த அந்த நாட்டின் உதவி குறிப்பிடத்தக்கது. ரோபட் தொழில்நுட்பத்தில் சீனா,ஜப்பான் ஆகியவைதான் சிறப்பான இடத்தில் உள்ளன. தற்போது இரு நாடுகளில் ஹோட்டல் உட்பட பல இடங்களில் ரோபட் பயன்பாடு வந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் சீனா ரோபட்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கும் போது விலை மிகவும் மலிவாக கிடைக்கும். அந்த சூழ்நிலையில் உலக சந்தை முழுவதும் அந்த நாட்டில் சிக்கிவிடும். அதற்கு செக் வைக்க மோடி இந்த முறை ரோபட் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

குறிப்பாக சொல்வது என்றால் பிரதமர் மோடி, ஷின் ஷோ அபே சந்திப்பில் இயற்கையான கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் கொடுக்கப்பட்டது. இதை ஆசிய பசிபிக் நாடுகளின் அட்சயபார்த்திரமாக பார்க்கலாம். இந்த இருநாடுகளின் ஒத்துழைப்பு இனிவரும் காலத்திலும் மேலும் தொடரும் என்ற நம்பிக்கை இருதரப்பிலும் உள்ளது. அந்த நம்பிக்கை முழுவதும் செயல்வடிவம் பெறும்போது உலகம் கிழக்கை நோக்கி தொழும் நேரம் வந்து விட்டது என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் தமிழர்களாக நமக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை; ஓட்டுக்கு 5 ஆயிரம், பணமாவே தராங்களாம், இதை தவிர வசந்த் அண் கோ விளம்பரம் போல பொருட்கள் வரிசை கட்டி நிற்கிறதாம், நமக்கு அது போதும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP