அசிங்கப்படுத்திய அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: பாலஸ்தீனம்

அசிங்கப்படுத்திய அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: பாலஸ்தீனம்
 | 

அசிங்கப்படுத்திய அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: பாலஸ்தீனம்


பாலஸ்தீன தலைவர் மெஹ்மூத் அப்பாஸ் நேற்று அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறையை எங்களுக்கு கொடுத்துவிட்ட அவர்களுடன் எதற்கு பேச்சுவார்த்தை என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னையில் ஒரு தீர்வு காண, அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகளை தாங்கள் ஏற்கமாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே உள்ள சர்ச்சைக்குரிய வெஸ்ட் பேங்க் பகுதிகளில், இஸ்ரேல் அரசு தொடர்ந்து அந்நாட்டு மக்களை சட்டவிரோதமாக குடியேற்றி வருகிறது. இது பாலஸ்தீன மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த மாதம், ஜெரூசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் புனித நகரமான ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்காக ஐ.நா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீன சமரசம் மிகப்பெரிய வெற்றியாக அமையும் என டிரம்ப் கூறிவருவதை விமர்சித்து அப்பாஸ் பேசினார். தனது கட்சியினர் முன்னிலையில் அவர், "மிகப்பெரிய வெற்றி நமக்கு அவர்கள் கொடுத்த மிகப்பெரிய அறை. அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

மேலும், அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலியையும், இஸ்ரேலுக்கான அந்நாட்டின் தூதர் டேவிட் ப்ரீட்மேனையும் அந்த பதவிகளுக்கு நியமித்தது 'மிகப்பெரிய அசிங்கம்' என்றும் அப்பாஸ் கூறினார். ப்ரீட்மேன் சர்ச்சைக்குரிய வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேலியர்கள் குடியேற்றத்தை ஆதரிப்பவராவார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP