சவுதி அரேபியாவில் முதன் முறையாக வங்கித் தலைவராகும் பெண்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஃபோர்ப்ஸ் இதழின் ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் ஆவார்.
 | 

சவுதி அரேபியாவில் முதன் முறையாக வங்கித் தலைவராகும் பெண்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சவுதி அரேபியாவில் இயங்கும் சவுதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய 3-வது வங்கியாக இது உருவெடுத்துள்ளது. இதன் தலைவராக லுப்னா அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதி அரேபோயாவின் முதல் வங்கித் தலைவர் என்ற பெருமையை லுப்னா பெற்றுள்ளார். 

இவர் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தவர ஆவார். ஃபோர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டவிதிகள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் பெண்கள் கார் ஓட்டுவதற்கே அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. அதே போல உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் இருக்கும் நாகரிக ஆடைகள் அணிந்து கொள்ள பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டது.  பின்னர் ரியாத்தில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தின் போது, நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இது போன்ற சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் தொடர் சீர்த்திருத்த நடவடிக்கைகள் பல தரப்பினரால் வரவேற்கப்படுகிறது. இருப்பினும் அங்கு பழமைவாத நபர்களால் எதிர்ப்பும் இருந்து வருகிறது. அல்-கொய்தா தீவிரவாத அமைப்பும் இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP