வரலாற்று ரீதியிலான வருத்தத்தை அமெரிக்கா சந்திக்கும்: ஈரான்

அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், அதற்காக வரலாற்று ரீதியிலான மிகப்பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்கும் என ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி எச்சரித்திருக்கிறார்.
 | 

வரலாற்று ரீதியிலான வருத்தத்தை அமெரிக்கா சந்திக்கும்: ஈரான்

வரலாற்று ரீதியிலான வருத்தத்தை அமெரிக்கா சந்திக்கும்: ஈரான்அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், அதற்காக வரலாற்று ரீதியிலான மிகப்பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்கும் என ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி எச்சரித்திருக்கிறார். 

நேற்று முன்தினம் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில், நேரலையில் பேசிய ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி, "அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால், வரலாற்று ரீதியிலான மிகப்பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்கும். ட்ரம்ப் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்கொள்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. நாங்கள் அதனை எதிர்கொள்வோம்" என அவர் எச்சரித்தார். 

மேலும், அவர்களது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதி வாய்ந்தது எனவும் இந்த ஒப்பந்தம் மறு பேச்சுவார்த்தைக்கு உகந்ததல்ல எனவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. 

ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஃபிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதே ஒப்பந்தம். 

ஆனால், அப்போதைய அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு உடன்பாடு கிடையாது என்பதால், அவர் இதனை எதிர்த்து பேசி வருகிறார். 

இது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கடந்த 1-ந் தேதி ட்ரம்ப் அறிவித்தார். இதனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP