அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு எந்த மதிப்பும் இல்லை: அழைப்பை நிராகரித்தது ஈ

ஈரானுடனான உறவை மேம்படுத்துவது என்பது குறித்து ஈரான் அதிபருடன் பேசத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஈரான் தரப்பு நிராகரித்துள்ளது.
 | 

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு எந்த மதிப்பும் இல்லை: அழைப்பை நிராகரித்தது ஈரான்!

ஈரானுடனான உறவை மேம்படுத்துவது என்பது குறித்து ஈரான் அதிபருடன் பேசத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஈரான் தரப்பு நிராகரித்துள்ளது. 

இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீஃப் கூறுகையில், ''ஈரானுடனான உறவைத் துண்டித்துக் கொண்டது குறித்து அமெரிக்கா, தன்னைத் தானே நொந்து கொள்ள வேண்டும். எங்கள் நாட்டு மீது வரிகள் விதிப்பது, மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது'' என்று ட்விட்டரில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அந்த  நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பாரம் கோஸ்மி, ''எங்கள் மீது அழுத்தம் போடுவதோ, வரிகள் விதிப்பதோ பேச்சுவார்த்தைக்கும் சுமூக நடவடிக்கைகளுக்கும் எதிராக செயல்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஈரான், அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் உச்சம் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ''ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியிருந்தார். தற்போது அவரது பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்த அமேரிக்கா வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரானுடன் மேற்கொண்டது. 

அந்தபடி, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இதனிடையே, தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கடந்த மே மாதம் அறிவித்தார். அதோடு அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். 

மேலும், அந்த நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், கச்சா  எண்ணெய் கொள்முதளை வரும் நவம்பர் மாதத்துடன் முழுவதுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தந்து வருகிறது. ஈரானில் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நாட்டு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. டாலருக்கு எதிரான அந்நாட்டு பணமான ரியாலின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது பொருளாதார நெருக்கடியின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP