கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிராமத்தை மீட்டது சிரிய ராணுவம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிழக்கு கூட்டாவில் உள்ள மற்றுமொரு கிராமத்தை அந்நாட்டு ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிராமத்தை மீட்டது சிரிய ராணுவம்

கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிராமத்தை மீட்டது சிரிய ராணுவம்சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிழக்கு கூட்டாவில் உள்ள மற்றுமொரு கிராமத்தை அந்நாட்டு ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு அருகில் உள்ள கிழக்கு கூட்டா பகுதி, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. இதை மீட்கும் பணியில் சிரியா - ரஷ்ய கூட்டுப்படைகள் ஈடுபட்டன. போர் நிறுத்தத்தையும் மீறி கிழக்கு கூட்டாவில் சிரியா தாக்குதல் நடத்தி வந்தத. இந்தநிலையில், அந்தப் பகுதியில் உள்ள பெய்ட் சாவா என்ற கிராமத்தை சிரியா கைப்பற்றியுள்ளதாகவும், தொடர்ந்து அங்கு முன்னேறி வருவதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த  மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக அந்நாட்டு அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராக ஆயுத போராட்டம்  நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரினால் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயரிழந்துள்ளனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்கு கூட்டா நகரை மீட்பதற்கான நடவடிக்கைகளை ரஷ்யாவின் ஆதரவுடன் சிரியா முன்னெடுத்து வருகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்களினால் இதுவரை 800-க்கும் அதிகமானவர்கள் உயிரழந்துள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP