துபாயில் விலையுயர்ந்த ஷூ: ரூ.123 கோடி தான் விலை! 

துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஷு தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம், வைரக்கற்களால் தயாரான ஷுக்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
 | 

துபாயில் விலையுயர்ந்த ஷூ: ரூ.123 கோடி தான் விலை! 

துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஷு தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம், வைரக்கற்களால் தயாரான ஷுக்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு நாடான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ஷு தயாரிக்கப்பட்டுள்ளன. இது தான் உலகின் மிக விலை உயர்ந்த, ஆடம்பர ஷூ எனக் கூறப்படுகிறது. முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டு, அதில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்ட ஒரு ஜோடி, ஷூ-வின் விலை இந்திய மதிப்பில் ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு எமிரகத்தில் முதல் முறையாக விற்பனைக்கு வர உள்ளது. இதனை ஜெட்டா துபாய் நிறுவனமும் பாசியன் ஜுவல்லரி என்ற அலங்கார வடிவமைப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இதனை முழுமையாக வடிவமைத்து தயாரிக்க 9 மாத காலம் ஆனதாக தயாரிப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதனை அதிகாரபூர்வமாக புர்ஸ் அல் ஆரப் என்ற துபாயின் பிரம்மாண்ட 7 நட்சத்திர ஆடம்பர ஓட்டலில் அறிமுகம் செய்ய்யப்படுகிறது. 

இதற்கு முன்னதாக 'டெப்பி லிங்காம்' என்ற ஹைஹீல்ஸ் செருப்பு விலை உயர்ந்ததாக கூறப்பட்டது. அதன் மதிப்பு ரூ.110 கோடியாக கூறப்பட்டது. அதனை இந்த ஷூ முறியடித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP