இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல், ஊழல், மோசடி மற்றும் நன்னம்பிக்கை மீறல் உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
 | 

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மோசடி, ஊழல் மற்றும்  நன்னம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணையில், பிரபல பெஜெக் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதாகவும், அதற்கு பதிலாக அவரது ஊடகத்தில் தனக்கு சாதகமான செய்திகளை பிரதமர் பெற்றதாகவும்; சுயலாபத்திற்காக பெரும் பணக்காரர்களிடம் இருந்து பரிசுகள் வாங்கியதாகவும்; பிரபல தொழிலதிபர் அர்னான் மோஜஸ் ஊடகத்தில், தனக்கு சாதகமான செய்திகள் வருவதற்காக அவரது எதிரியின் மீது நடவடிக்கை எடுத்தது, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையில், பிரதமரின் கட்சியை சேர்ந்த அவரது அட்டர்னி ஜெனரல் அவிச்சாய் மெண்டல்பிளிட் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் வருவதற்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், பிரதமர் மீது பெரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது அவருக்கு மிகப் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP