தீவிரவாதம் வளர்ந்து வருகிறது: இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் சுஷ்மா சுவராஜ் பேச்சு

சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பயங்கரவாதம் வளர்ந்து வருவதாகவும், அதன் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
 | 

தீவிரவாதம் வளர்ந்து வருகிறது: இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் சுஷ்மா சுவராஜ் பேச்சு

சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பயங்கரவாதம் வளர்ந்து வருவதாகவும், அதன் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான சந்திப்பு அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில், இந்தியா பார்வையாளர் நாடாக கலந்துகொள்ள முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறப்பு விருந்தினராக சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தீவிரவாதம் அப்பாவி மக்களை அழித்து வருவதாகவும், நாடுகளை சீர்குலைத்து, உலகை மிகவும் ஆபத்தான கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். 

"நான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களை கொண்டு வந்துள்ளேன். அதில், 18.5 கோடி இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் அடங்குவர். இஸ்லாமிய சகோதர சகோதரிகள்தான் இந்தியாவின் பன்முகத்தன்மையின் மையம். தங்களது நம்பிக்கைகளையும், வாழ்வியலையும் ஒருவரோடு ஒருவர் இணக்கமாகவும், மற்ற மதத்தை சேர்ந்தவர்களுடன் அன்பாகவும் பழகியும் வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் தான், பெரும்பாலான இஸ்லாமியர்கள், மோசமான, அடிப்படைவாத வன்முறை கொள்கைகளுக்கு தங்களின் சித்தாந்தத்தில் இடம் கொடுக்காமல் வாழ வழிவகை செய்கிறது" என்றார்.

மேலும், "தீவிரவாதம் மக்களை அழித்து வருகிறது. பல பகுதிகளை நிலை குலைய செய்துள்ளது. உலகை ஆபத்தான இடமாக மாற்றியுள்ளது. தீவிரவாதம் தொடர்ந்து வளர்ந்து, அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது" என்றும் கூறினார்.

"தீவிரவாதத்திற்கு எதிரான சண்டை, எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. இஸ்லாம் என்றால் அமைதி என்பது போலவே, அல்லாஹ்வின் 99 பெயர்களில் எதுவுமே வன்முறை என்பது இல்லை. ஒவ்வொரு மதமும் அமைதியையே போதிக்கிறது" என்றும் கூறினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP