ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்; 38 பேர் பலி

ஈராக்கில் நேற்று தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
 | 

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்; 38 பேர் பலி


ஈராக்கில் நேற்று தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

ஈராக் நகரின் பெரும்பாலான பகுதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் அதிக தாக்குதல்கள் நடைபெற்றன. பின்னர் ஈராக் ராணுவம் அமெரிக்காவின் உதவியுடன் பெரும்பாலான பகுதிகளை மீட்டெடுத்தது. இதனால் தீவிரவாதிகள் தாக்குதல் குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது. 

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான டெய்ரான் எனும் இடத்தில் நேற்று தற்கொலை படையினர் இருவர் இரு வேறு இடங்களில் தமது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர். இரண்டு இடங்களில் நடைபெற்ற இந்த தாக்குதலில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் பெரும்பாலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியிருப்பர் என கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP