ஏமனில் சவுதி தாக்குதல்: 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம் 

ஏமனில் மன்னருக்கு ஆதரவான சவுதி அரேபியாவின் விமானப் படை நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். சுமார் 120க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஏமனில் சவுதி தாக்குதல்: 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம் 

ஏமனில் மன்னருக்கு ஆதரவான சவுதி அரேபியாவின் விமானப் படை நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். சுமார் 120க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏமனில் சன்னி பிரிவு ஆதரவு அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 2015 முதல் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.  இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கணக்கிட்டுள்ளது. 

அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியா ஆயுதங்களையும் தனது படையையும் அளித்து வருகிறது. அதே போல ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிகின்றது.

இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள அல்-குடாய்டா துறைமுக நகரத்தை குறிவைத்து சவுதி அரேபியாவின் விமானப்படை நடத்திய தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளனர். 124 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். இவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக எமன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

ஏமனில் அல்-குடாய்டா துறைமுகம் மிக முக்கிய வர்த்தக முனையம் ஆகும். இங்கு இருந்து தான் சுற்றுவட்டார நகருங்களுக்கு ஏதுவான பல வர்த்தக நிலையங்கள் இயங்குகின்றன. ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் எரிபொருள், மருந்துகளை இறக்குமதி செய்து வருகின்றனர். எனவே இந்த நகரின் துறைமுகம் மற்றும் அதற்கு தொடர்பான பகுதிகளைக் குறிவைத்து சவுதி அரேபியா தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP