சவுதி அரேபியாவின் தூதராக முதன்முறையாக பெண் நியமனம்!

அமெரிக்காவிற்கான சவுதி அரேபிய தூதராக இளவரசி ரிமா பிண்ட் பண்டார் அல் சவுத் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரசவையில் பெண் தூதராக பொறுப்பேற்க இருக்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

சவுதி அரேபியாவின் தூதராக முதன்முறையாக பெண் நியமனம்!

அமெரிக்காவிற்கான சவுதி அரேபிய தூதராக இளவரசி ரிமா பின்ட் பண்டார் அல் சவுத் நியமிக்கப்பட்டுள்ளார். 

தூதராக இருந்த இளவரசர் கலித் பின் சல்மான் துணைப் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு ஏற்றதைத் தொடர்ந்து, புதிய தூதரை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. இளவரசி ரிமா பின்ட் பண்டார் அடுத்த தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரசவையில் தூதர் பதவியை ஏற்க போகும் முதல் பெண்மணி இவர்தான்.

சவுதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலையை அடுத்து, இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், புதிய தூதரின் நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிமாவின் தந்தை பண்டார் அல் சுல்தான் சவுத் அமெரிக்க தூதர் பொறுப்பில் 1983ம் ஆண்டிலிருந்து 2005 வரை இருந்தார்.அவரின் பதவி காரணமாக ரிமா தனது குழந்தை பருவத்தை அமெரிக்காவில் கழித்தார். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சிய படிப்புகளுக்கான பட்டம் பெற்றுள்ளார் ரிமா.

2005ம் ஆண்டு ரியாத் திரும்பிய பிறகு பொது மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வந்தார் ரிமா. ரியாதில் உள்ள ஹார்வி நிக்கோலஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார். பெண்களுக்கான உரிமைகள் குறித்து ரிமா தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP