சிக்கன நடவடிக்கையால் ரூ.185 கோடி மிச்சம்: பாகிஸ்தான் அரசுக்கு பாராட்டு 

சிக்கன நடவடிக்கையால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.185 கோடி மிச்சமாவதாகவும் மக்களின் வரி பணம் ஆடம்பரத்திற்காக பிரதமரால் வீணாக்கப்படவில்லை என்று கல்ஃப் பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளது.
 | 

சிக்கன நடவடிக்கையால் ரூ.185 கோடி மிச்சம்: பாகிஸ்தான் அரசுக்கு பாராட்டு 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் சிக்கன நடவடிக்கையால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.185 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாகவும் துபாயில் இருந்து வெளியாகும் கல்ஃப் பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.  பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான் இந்தச் சூழல்களை கருத்தில் கொண்டு அரசுத் தரப்பில் ஆடம்பர செலவுகளை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார். இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த வாக்குறுதி அவரது மதிப்பினை பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிச்சயம் உயர்த்தும் என்று துபாயில் வெளியாகும் கல்ஃப் பத்திரிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.  பாகிஸ்தானின் பற்றாக்குறை ரூ.66 ஆயிரம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பொறுப்பேற்றது முதல் இம்ரான் கான் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ண்டு வருகிறார். பிரதமர் இல்லத்தில் ஆடம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன என்றும் ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிட பணம் இல்லை என்றும் கூறி நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. இஸ்லாமாபாத்தில் 3 படுக்கை அறை கொண்ட ராணுவ செயலாளர் வீட்டில் தங்குகிறேன். 

பின்னர், ஆடம்பர பிரதமர் மாளிகையில் இருக்கும் இரு ஜீப்களை தவிர்த்து மற்ற சொகுசு கார்களை ஏலத்தில் விடப்போவதாகவும் அவர் அறிவித்தார். இதனால் பொது மக்களின் வரி பணம் ஆடம்பரத்திற்காகவும் மற்றும் அரசு விதிகளுக்காகவும் பிரதமரால் வீணாக்கப்படவில்லை என்ற நற்செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என துபாயில் இருந்து வெளியாகும் கல்ப் பத்திரிகை இம்ரான் கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. 

அதே போல பிரதமர் அலுவலகத்துக்காக பாகிஸ்தான் அரசு பிரதமர் இல்ல செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூ.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதேபோன்று பிரதமர் இல்ல ஊழியர்களுக்காக ரூ.70 கோடி செலவிடப்படுகிறது. மேலும், உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்களின் வருகைக்கும் பரிசுகளுக்கும் ரூ.15 கோடியும் மற்றும் புதுப்பித்தல் மற்றும் அலங்கரித்தல் பணிகளுக்காக ரூ.1.5 கோடியும் செலவிடப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP