சவூதி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் ரூ.7,100 கோடி பறிமுதல்!

சவூதி இளவரசர் சல்மான் ஆணையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், 100 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 7,100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.
 | 

சவூதி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் ரூ.7,100 கோடி பறிமுதல்!

சவூதி இளவரசர் சல்மான் ஆணையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், 100 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 7000 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு சவுதி இளவரசர் சல்மானின் உத்தரவின்பேரில் ராஜ பரம்பரையை சேர்ந்த வாரிசுகள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். வாரக்கணக்கில் பலர் அரசின் பிடியில் இருந்தனர்.

அதற்கு பிறகு பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இளவரசர் சல்மான் ஒப்புதலுடன் இந்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகள் என 381 பேர் வரவழைக்கப்பட்டதாகவும், அதில் 87 பேர் தங்களது குற்றங்களை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அரசுடன் அவர்கள் ரகசிய சமரசத்திற்கு வந்து, இதில் 100 பில்லியன் டாலர்களுக்கும் மேல், அதாவது சுமார் 7000 கோடிக்கும் மேல் அரசுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP