தற்கொலை செய்வதை சமூக வலைத்தளங்களில் காட்ட முயன்ற இந்திய பெண் மீட்பு

ஷார்ஜாவில் வசித்து வரும் இந்திய பெண், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்து அதை சமூக வலைதளங்களில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய இருந்த நிலையில், போலீசாரால் மீட்கப்பட்டார்.
 | 

இந்தியாவை சேர்ந்த 20 வயதான இளம்பெண், தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் வசித்து வருகிறார். அவரை சமீபத்தில் சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து கிண்டலடித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

தனது தற்கொலையை, சமூகவலைத்தளங்களில் நேரலையில் காட்ட உள்ளதாகவும் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதைப் பற்றி தெரிந்து கொண்ட துபாய் போலீசார், உடனடியாக ஷார்ஜா போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த பெண்ணை கண்டு பிடிக்குமாறு அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து சென்று, அவரது தந்தையிடம் விஷயத்தை தெரிவித்தனர். பெண்ணின் அறையை திறந்து பார்த்தபோது அவர் தற்கொலைக்கு தயாராகி வந்ததை  கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு, உளவியல் ரீதியான மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP