ரஷ்ய ராணுவ விமானத்தை வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்: சிரியாவில் பதற்றம்!

ரஷ்ய போர் விமானத்தை சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் விமானியும் பரிதாபமாக உயிரிழந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
 | 

ரஷ்ய ராணுவ விமானத்தை வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்: சிரியாவில் பதற்றம்!

ரஷ்ய போர் விமானத்தை சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் விமானியும் பரிதாபமாக உயிரிழந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் மறைமுக ஆதரவு அளித்து வருகின்றன. அதேநேரத்தில் சிரியா அரசுக்கு ரஷ்யா நேரடி ஆதரவை அளித்து வருகிறது. அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியும் வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நேற்று கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த வந்த ரஷ்ய போர் விமானத்தைக் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 


சிரியாவின் இத்லிப் மாகாணத்தின் வட மேற்குப் பகுதியில் உள்ள சாராகூப் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த நேற்று ரஷ்யாவின் எஸ்யு 25 ரக போர் விமானம் வந்தது. இதைக் கண்ட கிளர்ச்சியாளர்கள் போர் விமானத்தின் மீது விமான எதிர்ப்பு ஏவுகணை வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் போர் விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்த விமானியும் கொல்லப்பட்டதாகக் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போர் விமானத் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக சீனா செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் கோபம் அடைந்திருக்கும் ரஷ்யா, கிளர்ச்சியாளர்கள் மீது மிக பயங்கர தாக்குதலை நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP