'ஒபெக்'-லிருந்து விலகுவதாக கத்தார் திடீர் அறிவிப்பு

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான 'ஒபெக்'-லிருந்து விலகப்போவதாக கத்தார் திடீரென அறிவித்துள்ளது. கத்தாரின் இந்த முடிவு பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
 | 

'ஒபெக்'-லிருந்து விலகுவதாக கத்தார் திடீர் அறிவிப்பு

பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக ஒர் அறிவிப்பை வெளியிட்டு சர்வதேச சந்தையில் கத்தார் அரசு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான 'ஒபெக்'-லிருந்து விலகப்போவதாக கத்தார் அரசு திடீரென அறிவித்துள்ளது. கத்தாரின் இந்த முடிவு பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. மேலும் அரபு நாடுகளிடையே உள்ள மோதல் போக்கை அதிகமாக்கும் சூழலும் உள்ளது. 

சமீபத்தில் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் கத்தாருடனான தூதரக உறவைத் துண்டித்தன. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கத்தாரின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து அந்த நாட்டுடன் விமான சேவையும் நிறுத்தப்பட்டது.

தரை வழியாகப் பொருட்களை, அண்டை நாடுகளான மற்ற அரபு நாடுகள் வழியாகத் தான் கொண்டு செல்ல முடியும். ஆனால் அந்தப் பாதையை சவுதி அரேபிய அரசு அடைத்து முட்டுக்கட்டை போட்டது. இதனால் உணவு பொருட்கள் பஞ்சத்தால் அந்நாட்டுப் பொருளாதாரம் முடங்கியது. இந்த நிலைக்கு உதவிட அமெரிக்கா மற்றும் ரஷ்யா அரசுகள் இதில் தலையிட்டு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்டன.

இப்படி இருக்க திடீரென எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான 'ஒபெக்'-லிருந்து வெளியேறப்போவதாக கத்தார் இன்று அறிவித்துள்ளது.

கத்தார் பெட்ரோலியத்துறை அமைச்சர் சத் அல் - காஃபி தோஹா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து கூறுகையில், '' 'ஒபெக்' பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேற நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த முடிவு அமலுக்கு வரும். நாளை நடைபெறும் கூட்டத்தில் எங்கள் முடிவை தெரிவித்து விடுவோம்'' என்று அறிவித்துள்ளார். இந்த முடிவு சவுதி அரேபிய அரசு ஏற்படுத்திய நெருக்கடியால் எடுக்கப்பட்டதல்ல எனவும் அந்நாட்டு குறிப்பிட்டுள்ளது. 'ஒபெக்'- கூட்டமைப்பில் கத்தார் 57 ஆண்டுகளாக இருந்து வருகிறது. 

இந்த அறிவிப்பை அடுத்து சவுதி கூட்டமைப்பு நாடுகள் எடுக்கும் பதில் நடவடிக்கை மிகப் பெரிய பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் கருதப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP