இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரியங்காவின் சீரியல் படக் குழு!

பிரியங்கா சோப்ரா நடிக்கும் குவான்டிகோ சீரியலில் இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த காட்சிகளுக்கு வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, சீரியல் தயாரிப்பு நிறுவனம் இந்தியர்களிடம் மன்னிப்பு கூறியது.
 | 

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஏபிசி என்ற அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியாகும் 'குவான்டிகோ' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் இந்த சீரியாலுக்கு அங்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. 

இந்த சீரியலில் சமீபத்தில் வெளியான ஒரு எபிசோடில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து, நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சி வெளியானதிலிருந்து சீரியல் குழுவும் பிரியங்கா சோப்ராவும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகினர். அமெரிக்க வாழ இந்தியர்கள் நேரடி எதிர்ப்பையும் தயாரிப்பு நிருவனத்திடம் முன்வைத்தனர்.

சமூக வலைதளங்களில் சீரியலை பலர் விமர்சிக்க, வேறு வழியின்றி சீரியல் தயாரிப்பு நிறுவனம் இந்தியர்களிடம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP