சவுதியுடன் பாகிஸ்தான் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசர் சல்மான், 20 பில்லியன் டாலர்கள் அதாவது ஒரு 1,40,000 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
 | 

சவுதி இளவரசர் சல்மான், ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் இரண்டு நாட்கள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள அவர், அந்நாட்டு அரசுடன் 20 பில்லியன் டாலர்கள், அதாவது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்த ஒப்பந்தங்கள் பெருமளவு உதவும் எனக் கூறப்படுகிறது. 

இதில் முக்கியமாக, ஒரு ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் க்வதார் பகுதியில், சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் எண்ணெய் சுத்தீகரிக்கும் தொழிற்சாலையை 10 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்கள் குறித்து பேசிய சவுதி இளவரசர் சல்மான், "சவுதி மக்களுக்கு பாகிஸ்தான் மிக நெருக்கமான ஒரு நாடாகும். எப்பொழுதும் போல் கூட்டணி நாடுகளாக தொடர்வோம்" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP