அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது: ஈரான் திட்டவட்டம்

வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 | 

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் கடந்த 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியின் போது ஏற்ப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். அவ்வாறு ஒப்பந்தம் இருந்தாலும் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம், 'அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தெரிவித்துள்ளது. மேலும், இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றம் செய்தால் அதை ஈரான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது' என திட்டவட்டமாக கூறியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP