முக்கிய ஐ.எஸ் தீவிரவாத தலைவர் கைது!

லிபியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக செயல்பட்டு வந்தவரை, சிர்தே பகுதியில், லிபிய பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 | 

முக்கிய ஐ.எஸ் தீவிரவாத தலைவர் கைது!

லிபியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக செயல்பட்டு வந்தவரை, சிர்தே பகுதியில், லிபிய பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

லிபியாவில் சிர்தே நகரில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக கருதப்படும் கலீபா பர்க், அந்த பகுதியின் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிர்தே நகரில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வளர முக்கிய காரணமாக இவர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் இருக்கும் இடம் குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டார்.

தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிர்தே நகரில், ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, ஐநா ஆதரவு அரசு படைகளால் வீழ்த்தப்பட்டனர். ஆனால், தொடர்ந்து அந்த பகுதியில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எழுச்சி பெரும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP