குர்துகளை விட்டுவிட முடியாது: அமெரிக்காவுக்கு துருக்கி பதில்

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் பின் வாங்கும் முன்னர் அங்குள்ள அமெரிக்க ஆதரவு குர்து படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா கோருவது நியாயமற்றது, என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
 | 

குர்துகளை விட்டுவிட முடியாது: அமெரிக்காவுக்கு துருக்கி பதில்

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் பின் வாங்கும் முன்னர் அங்குள்ள அமெரிக்க ஆதரவு குர்து படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா கோருவது நியாயமற்றது, என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறைக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. எந்த வித முன்னறிவிப்பும், ஆலோசனையும் இன்றி, ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டதாலும், படைகளை திரும்பப்பெறுவதில் விடாப்பிடியாக இருந்ததாலும், ட்ரம்ப்பின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சிரியாவில் அமெரிக்காவுடன் கூட்டணி போட்டு ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர் குர்து படைகள். குர்து படைகளை தீவிரவாதிகளாக கருதும் துருக்கி அரசு, அவர்களை தாக்க காத்திருக்கும் நிலையில், அமெரிக்க படைகள் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டால், குர்து படைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளர் ஜான் போல்ட்டன், இதுகுறித்து துருக்கி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்,  அமெரிக்க படைகள் பின்வாங்கப்பட்டால், குர்து படைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என துருத்தி உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன், "போல்ட்டனின் கருத்துக்களை ஏற்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகள். தீவிரவாதிகளை அழிக்க கூடாது என யாரும் சொல்லக் கூடாது. என்ன நடந்தாலும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP