கஷோகி திட்டமிட்டே கொல்லப்பட்டார்!- சவுதி அரசு வழக்கறிஞர் கூறுகிறார்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என சவுதி அரேபிய அரசு வழக்கறிஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார். திட்டமிட்ட கொலை என்று வழக்கறிஞர் ஒப்புக்கொண்டுள்ளது சர்வதேச நாடுகளை அதிரச் செய்துள்ளது.
 | 

கஷோகி திட்டமிட்டே கொல்லப்பட்டார்!- சவுதி அரசு வழக்கறிஞர் கூறுகிறார்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என சவுதி அரேபிய அரசு வழக்கறிஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார்.

சவுதி அரசு செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்த அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அல்-ஏக்பாரியா, துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.  மேலும், இந்த கொலை திட்டமிட்டே கொல்லப்பட்டு இருப்பதாகவும் கூறுயுள்ளார். 

அக்டோபர் 2ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்காக எழுதி வந்த சவுதி நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி  இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு சென்றார். துருக்கி நாட்டு பெண் ஒருவரை திருமணம் செய்ய இருந்த அவர், அதற்காக ஆவண வேலை ஒன்றிற்காக அங்கு சென்றார். ஆனால் அவர் திரும்பவில்லை. இந்த விவகாரம் குடும்பத்தினரால் புகாராக தெரிவிக்கப்பட்டது.  தூதரகம் வந்த கஷோகி திரும்பிச் சென்றுவிட்டதாக ஆரம்பத்தில் சவுதி தூதரகம் கூறியது. பின்னர் துருக்கி அரசு சந்தேகம் எழுப்பி தூதரக சிசிடிவி பதவை பார்த்து, அவர் தூதரகத்திலிருந்து வெளியேறவே இல்லை எனக் கூறி, இதன் விசாரணையை தீவிரப்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா - சவுதி இடையே ஆனா நல்லுறவு தற்போது ஊசலாடுகிறது. 

சந்தேகத்தை உறுதிபடுத்தி 15 பேரை அடையாளம் கண்டு விசாரித்து வருவதாக துருக்கி அரசு கூறியதை அடுத்து, தூதரகத்தில் நடந்த ஒரு கைகலப்பில் அவர் இறந்துவிட்டார் என்று சவுதி கூறியது.  அதிலும் இந்தக் கொலைக்கு மன்னர் அரசுக்கும் தொடர்பு இல்லை, சில முரட்டு அதிகாரிகள் தன்னிச்சையாக இந்தப் படுகொலையை நிகழ்த்தியதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறியது. 

தற்போது அது திட்டமிட்ட கொலை என்று அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது சர்வதேச நாடுகளை அதிரச் செய்துள்ளது. 

இதனிடையே ஜமால் கஷோகி  துருக்கியில் உள்ள தூதரகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடியோவை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இயக்குநர் ஜினா ஹேஸ்பல் கேட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.  துருக்கி அதிகாரிகளிடம் அவர் பெற்ற விவரங்கள் குறித்து அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் அவர் விரிவான அறிக்கை வழங்க உள்ளார். 

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி சவுதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்துவந்தவர். துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP