பத்திரிகையாளர் கொலையில் சவூதி மன்னருக்கு நெருக்கமானவர்களுக்கு வலை வீச்சு!

சவூதி அரசுக்கு எதிராக எழுதி வந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை, துருக்கியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் வைத்து கொலை செய்ததாக தேடப்படுபவர்கள், சவூதி பட்டத்து இளவரசருக்கு நெருக்கமானவர்கள் என தெரிய வந்துள்ளது.
 | 

துருக்கியில் வசித்து வந்த சவூதி பத்திரிகையாளர் ஜமால் காஷோகி, அங்குள்ள சவூதி தூதரகத்திற்கு சென்றபின் மாயமானார். அவர் கொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, துருக்கி தூதரகத்தில் இருந்து அப்புறப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக, கஷோகி சவூதி தூதரகத்திற்கு சென்ற அதே நேரத்தில், அங்கு சென்ற 15 சவூதி நாட்டவர்களை துருக்கி அரசு தேடி வருகிறது. 

தங்களுக்கு எதிராக எழுதியதால், கஷோகியை திட்டமிட்டு சவூதி அரசு கொலை செய்ததாக கூறப்படுகிறது. சவூதியில் இருந்து மர்மமான முறையில் துருக்கி சென்ற அந்த 15 பேரில், ஒருவர், பிரேத பரிசோதனை நிபுணர் என்றும், பிரேத பரிசோதனையில் பயன்படுத்தப்படு ரம்பம் ஒன்று தூதரகத்திற்குள் கொண்டு சொல்லப்பட்டதும் தெரிய வந்தது. கஷோகியை சவூதி தூதரக பாதுகாப்பில் வைத்து, சித்தரவதை செய்து கொலை செய்ததாக துருக்கி போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில், இந்த கொலையில் சந்தேகப்படும் 15 பேரில், மூன்று பேர் சவூதி பட்டத்து இளவரசரின் பாதுகாப்பு அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும், சவூதி அரச குடும்பத்தின் பாதுகாப்பு பணியில் உள்ள இருவர், சவூதி அரசுக்குக்காக பணியற்றும் பிரேத பரிசோதனை நிபுணர் என தொடர்ந்து பலரும் சவூதி அரசுக்கு நெருக்கமான தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. 

இரு தினங்களுக்கு முன், விசாரணையின் போது கஷோகி பலியானதாக தெரிவிக்க சவூதி அரசு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP