ஜமால் கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி: சவுதி இளவரசர்

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை விவகாரம் சவுதிக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் இளவரசர் சல்மான், கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என அமெரிக்க அரசிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

ஜமால் கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி: சவுதி இளவரசர்

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை விவகாரம் சவுதிக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் இளவரசர் சல்மான், கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என அமெரிக்க அரசிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சவுதி அரசுக்கு எதிர்க்க எழுதிவந்த அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, கடந்த மாத துவக்கத்தில் மாயமானார். துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு கடைசியாக சென்ற அவர், அங்கு சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை, துருக்கி அரசும் உறுதி செய்துள்ளது. ஆனால், தங்கள் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற ஒரு கைகலப்பில், கஷோகி எதிர்ப்பாராத விதமாக இறந்துவிட்டதாக சவுதி அறிக்கை வெளியிட்டது. இதனால், சர்வதேச அளவில் சவுதிக்கு நெருக்கடி எழுந்தது. சவுதியுடனான பல ஒப்பந்தங்களில் இருந்து மற்ற நாடுகளும், பல பெரிய நிறுவனங்களும் பின்வாங்க துவங்கின. 

சவுதியுடன் நெருக்கமாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் அந்நாட்டை விமர்சித்தார். ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், சவுதியுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில், கஷோகி விவகாரம் குறித்து, ட்ரம்ப்பின் மருமகன் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் போல்ட்டன் ஆகியோருடன் இளவரசர் சல்மான் தொலைபேசியில் பேசியதாக தெரிகிறது. இந்த அழைப்பில், "கஷோகி ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி" என சல்மான் கூறியதாக அமெரிக்க செய்தி நிறுவனமான வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால், இரு நாட்டு உறவு பாதிக்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், கடந்த வாரம் கஷோகி விவகாரம் குறித்து பேசிய இளவரசர் சல்மான், "இது மோசமான தவறு. மோசமான நிகழ்வு. சவுதி மக்களுக்கு இது மிகவும் கடினமான ஒரு தருணம்" என அறிக்கை வெளியிட்டிருந்தார். வெளியே கஷோகியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, அமெரிக்க பிரதிநிதிகளிடம் சல்மான் மாற்றி பேசியுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP