ஊழல் வழக்குகளில் இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை

ஊழல் வழக்குகளில் இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை
 | 

ஊழல் வழக்குகளில் இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை


இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது அந்நாட்டு காவல்துறை. ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். 

கடந்த சில நாட்களாக நேதன்யாகுவின் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரங்கள் உள்ளதாக கூறி வந்த இஸ்ரேல் போலீசார், தற்போது அந்நாட்டு அட்டர்னி ஜெனரலிடம் பரிந்துரை செய்துள்ளனர். போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை வைத்து, போதிய ஆதாரங்கள் இருந்தால் பிரதமருக்கு எதிரான வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அட்டர்னி ஜெனரல் முடிவெடுப்பார். 

இதுபோன்ற பரிந்துரைகளில் பாதியின் மீது தான் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் நடவடிக்கை எடுக்கும் என நேதன்யாகு கூறி வருகிறார். பிரதமர் நேதன்யாகு நியமித்த அட்டர்னி ஜெனரல், அவர் மீதே வழக்கு தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் நெருக்கடியில் உள்ளார்.

ஆனால், இஸ்ரேல் வரலாற்றில் இதுபோல பல பிரதமர்கள் மீது ஊழல் வழக்குகள் போடப்பட்டு, பதவியை விட்டு அவர்கள் விலகியிருப்பதால், அட்டர்னி ஜெனரல் தயங்க மாட்டார் என கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP