வீடு புகுந்து வேட்டையாடிய ஐ.எஸ் தீவிரவாதிகள்: சிரியாவில் 220 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 220 ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

வீடு புகுந்து வேட்டையாடிய ஐ.எஸ் தீவிரவாதிகள்: சிரியாவில் 220 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 220 ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிரியாவின் ஸ்விடா மாகாணத்தின் தெற்கு பகுதியில், நேற்று (புதன்கிஅழமை) 2க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ்.  தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் பலியானோர் எண்ணிக்கை 215 என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 130 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் வருகின்றனர். 

கடந்த 7 வருடங்களாக நடந்து வரும் சிரியப் போரில், ஸ்விடா மாகாணம் அதிக தாக்குதலுக்கு உள்ளாகாத பகுதியாகும். அந்தப் பகுதியில் இத்தகைய மோசமான தாக்குதல் சம்பவம் முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது அங்குள்ள பொதுமக்களை அதிரச் செய்துள்ளது.  நேற்று அதிகாலை 3.50 மணி முதல் 4.30 மணிக்குள் வீடுகளுக்குள் புகுந்த தீவிரவாதிகள் பொதுமக்களை சரமாரியாக கொன்றுக் குவித்ததாக சிறிய போர் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் மக்கள் தூங்கும் வேளையில் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதுத் தவிர, நூற்றுக்கணக்கான மக்களை தீவிரவாதிகள் தங்களது பதுங்கு குழிகளுக்கு கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 
 

சிரியாவில் 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி, அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 7 ஆண்டுகள் முடிந்து 8–வது ஆண்டாக அந்த உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.

இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் கால் பதித்து பரவலாக பல இடங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP