சிரியாவில் நடந்த சண்டையில் ஐஎஸ் தலைவர் மகன் மரணம்!

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹூதைஃபா அல் பாத்ரி கொல்லப்பட்டதாக வந்தத தகவலை அந்த இயக்கம் உறுதிபடுத்தியுள்ளது.
 | 

சிரியாவில் நடந்த சண்டையில் ஐஎஸ் தலைவர் மகன் மரணம்!

சிரியாவில் நடந்த சண்டையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹூதைஃபா அல் பாத்ரி கொல்லப்பட்டதாக வந்தத் தகவலை அந்த இயக்கம் உறுதிபடுத்தியுள்ளது. 

சிரியாவில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மகன் சிரியாவில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. 

அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹூதைஃபா அல் பாத்ரி, ஹோம்ஸ் மாகாணத்தில் அனல்மின் நிலையம் அருகில் ரஷ்யர்களுக்கும் நுசரியா குழுவுக்குமான சண்டையின் போது உயிரிழந்துவிட்டதாக முன்னதாக தகவல் வெளியானது. 

இதனிடையே இயக்கத் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி தற்போதும் உயிருடன் இருப்பதாகவும், அவர் தான் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே, பாக்தாதி இறந்துவிட்டதாக பல முறை தகவல் வெளியாகி, பல முறை மறுப்பு அறிக்கையும் வெளியான நிலையில், தற்போது, அவனது மகன் இறந்துவிட்டதாக, அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதோடு இராக், சிரியா, என எங்கெங்கு தேவையோ அந்த இடங்களில் எல்லாம் புனித போராட்டம் தொடர வேண்டும் என்று அல் பாக்தாதி அறிவுறுத்தியதாக அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP