5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு: ரமலான் நாளில் சீக்கிய குழு உதவி

சிரியா உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு ஈராக் மற்றும் லெபனானில் தஞ்சமடைந்திருக்கும் 5000 சிரிய அகதிகளுக்கு சீக்கிய தொண்டு நிறுவனம் இப்தார் உணவை வழங்கியது.
 | 

5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு: ரமலான் நாளில் சீக்கிய குழு உதவி

சிரியா உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, ஈராக் மற்றும் லெபனானில் தஞ்சமடைந்திருக்கும் 5000 சிரிய அகதிகளுக்கு சீக்கிய தொண்டு நிறுவனம் இஃப்தார் உணவை வழங்கியது. 

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய மற்றும் பிற மத்தியக் கிழக்கு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். 

5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு: ரமலான் நாளில் சீக்கிய குழு உதவி

இவ்வாறு நாட்டைவிட்டு இருக்கும் மக்களுக்கு, லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் சீக்கிய தொண்டு நிறுவனமான 'கல்சா எய்ட்', இஃப்தார் உணவு, உடை, காலணி போன்ற பொருட்களை வழங்கியுள்ளது. 

சுமார் 5000 சிரிய அகதிகளுக்காக, 'ரமலான் கிச்சன்' எனக் குழு ஏற்படுத்தி அவர்களுக்கான உணவுகளை தயாரித்து, எடுத்து வந்து வழங்கியது 'கல்சா எய்ட்' தொண்டு நிறுவனம். இதேபோல, ஈராக்கில் உள்ள சிரியாவைச் சேர்ந்த 500 சிறார்களுக்கு ஆடைகள், காலணிகளை வழங்கியும் இருக்கிறது. 

இது குறித்து அந்த தொண்டு நிறுவனம் தனது ட்விட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், "2014-ம் ஆண்டு மொசூல் நகரில் போர் நடந்த போது இவர்களுடைய வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது நகரம் போரினால் சீர்குலைந்து கிடக்கிறது. அகதிகள் முகாமில் கடினமான சூழலில் வாழும் இந்த குழந்தைகளுக்கு இந்த ஆடைகள் ரமலான் தினத்தில் ஒரு பரிசாக அமையும்" என குறிப்பிட்டுள்ளது. 

'கல்சா எய்ட்'  சீக்கியத் தொண்டு நிறுவனம் தான், சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்த போதும், போர்க்களத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உணவு, உடைகள், காலனிகள் கொடுத்து உதவியது. மியான்மரில் இருந்து ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு இதேக் குழு உதவிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP