ராணுவ அணிவகுப்பில் 'ஐ.எஸ்' தாக்குதல்: அமெரிக்காவை குற்றம்சாட்டும் ஈரான் 

ஈரானின் குசேஸ்தான் மாகாணத்தில் உள்ள ஆவாஸ் நகரில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவை ஈரான் கண்டித்துள்ளது.
 | 

ராணுவ அணிவகுப்பில் 'ஐ.எஸ்' தாக்குதல்: அமெரிக்காவை குற்றம்சாட்டும் ஈரான் 

ஈரானின் குசேஸ்தானில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்காவை ஈரான் கண்டித்துள்ளது. 

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதும் இருப்பினும் அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆட்சியின்போது அண்டை நாடான ஈரான் மீது போர் தொடுத்தார். கடந்த 1980-களில் 8 ஆண்டுகள் இந்த போர் நீடித்தது. இந்த போரின் நினைவுநாளையொட்டி ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் சனிக்கிழமை அன்று ஈரான் ராணுவம் சார்பில், குசேஸ்தான் மாகாணத்தின் தலைநகரான அவாஸ் நகரில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

அப்போது திடீரென ராணுவ வீரர்கள் போல சீருடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், கூட்டத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை, பெண்கள், ராணுவ வீரர்கள் என 20 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், இந்தத் தாக்குதலை அரபு நாடுகளுடன் துணையுடன் அமெரிக்கா நடத்தியதாக ஈரான் அதிபர் ரஹானி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் இதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதேபோல, தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றது. 

இதுகுறித்து ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், ஈரான் அதிபர் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனது நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி ஒரு சாராரை ஒதுக்கி வருகிறார். அவர் தனது நிலையிலிருந்து விலகி நின்று இத்தகைய தாக்குதல்களுக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதை விடுத்து பிறநாடுகள் மீது குற்றம்சாட்டக்கூடாது'' என்றார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP