அணு ஆயுத ஒப்பந்தத்தில் கை வைக்க வேண்டாம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்கா உறுதியுடன் இருக்க வேண்டும், இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கை வைக்க வேண்டாம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கை வைக்க வேண்டாம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கைஅணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்கா உறுதியுடன் இருக்க வேண்டும், இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், கடந்த 2015-ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது, ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் நாங்கள் தெரிவித்திருந்தோம். இதன் காரணமாக எங்கள் நாட்டின் மீது இருந்த பொருளாதார தடைகள் அப்போது நீக்கப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று கூறி வருகிறார். ஈரான் அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் ட்ரம்ப் விதித்துள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா அதன் அணுஆயுத ஒப்பந்தங்களில் உறுதியாக இல்லாவிட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஹசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா - பிரான்ஸ் புதிய புதிய அணுசக்தி உடன்பாடு:

ஈரானுக்கு எதிராக புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா அதிபர் ட்ரம்பும், பிரான்ஸ் அதிபர் மக்ரோனும் திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகை தரப்பில், "பிரான்ஸ் அதிபர் மக்ரோன், ட்ரம்ப் உடனான சந்திப்பில் ஈரான் தனது அணுஆயுத சோதனைகள் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்ரம்ப் கூறும்போது, ’’ஈரானுடனான் ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது. அது ஒரு மோசமான சிதைவுகளுடன் கூடிய ஒப்பந்தம்” என்றும் விமர்சித்தார்.

மேலும், ஈரானுடனான ஒப்பந்தத்தை  ரத்து செய்து புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ட்ரம்பும், மக்ரோனும் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல், “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று வருகிறார். இதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோனும் ஆதரவு அளித்து வருகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP