ஈரான்: பார்ட்டி செய்த 72 இளைஞர்கள் கிரிமினல் வழக்கில் கைது!

ஈரானின் மசண்டரன் மாகாணத்தில், சரி என்ற பகுதியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 72 பேர் ஒன்றாக சேர்ந்து தடையை மீறி ஒன்றாக பார்ட்டி செய்தததாகவும், மதுபானங்கள் குடித்ததாகவும், அந்நாட்டு போலீசாரால் செய்யப்பட்டுள்ளனர்.
 | 

ஈரான்: பார்ட்டி செய்த 72 இளைஞர்கள் கிரிமினல் வழக்கில் கைது!

ஈரானின் மசண்டரன் மாகாணத்தில், சரி என்ற பகுதியில், ஆண்கள், பெண்கள் 72 பேர், ஒன்றாக சேர்ந்து தடையை மீறி பார்ட்டி நடத்தியதாகவும், மதுபானங்கள் குடித்ததாகவும், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்கள், பெண்கள் என மொத்தம் 72 பேர், மதுபானங்களுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது, போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. "இரு பாலின பார்ட்டி; மத கோட்பாடுகளை பின்பற்றாதது; மதுபானங்கள் குடித்தது ஆகியவை கிரிமினல் குற்றமாகும். இதுபோன்ற வழக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

1979ம் ஆண்டு, இஸ்லாமிய புரட்சிக்குப் பின், ஈரானில் இதுபோல பார்ட்டிகள் நடக்கும் இடங்களில் தாக்குதல் நடப்பது வழக்கமாகிவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில், அந்நாட்டின் சர்வாதிகாரி அலி காமேனி இதுபோன்ற 'சமூக பாதிப்புகளை' ஒழிக்க வேண்டும் என கூறியபிறகு, நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP