அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை: சிரியா வலியுறுத்தல்

சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிரிய அரசு வலியுறுத்தியுள்ளது.
 | 

அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை: சிரியா வலியுறுத்தல்

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரின்போது, ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிரியா வலியுறுத்தியுள்ளது. 

சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உள்நாட்டு போர் கடந்த ஏழு ஆண்டுகளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஒருபுறம் அரசு படைகளோடு மோதி நாட்டில் பல்வேறு இடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அதை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த நாட்டின் ராணுவம் கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலை தற்போது ஏற்பட்டுள்லது. இதனிடையே ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் சிரியாவின் ராணுவத்தின் மீது அமெரிக்கா ராணுவம் தலைமையிலான கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 

இதில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. 

இந்நிலையில், டீர்-அல்-சவுர் மாகாணத்தில் உள்ள ஹாஜின் நகரின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க கூட்டுப்படைகள் ரசாயன தாக்குதலை நடத்தியதாக  சிரிய அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டியது. இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிரிய அரசு, தொடர்ந்து இதுபோன்று குற்றங்களில் ஈடுபட்டு வரும் அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை சிரிய மக்கள் மீது பயன்படுத்தி, சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளை அமெரிக்க கூட்டுப்படைகள் வெளிப்படையாக மீறி வருவதாகவும், இது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், சிரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சட்டத்துக்கு புறம்பாகவும், அந்நிய நாட்டை ஆக்கிரமிக்கு நோக்கிலும் சிரிய நாட்டில் அமெரிக்க படைகள் முகாமிட்டு உள்ளதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சிரிய அரசு அறிவித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP