இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் சந்திப்பில் முதன்முறையாக இந்தியா!

அபுதாபியில் நடைபெறவுள்ள இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 | 

சர்வதேச அளவில் இயங்கி வரும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில், 57 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இந்த கூட்டமைப்பின் மூலம், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க சமீபகாலத்தில் முயற்சி செய்து வருகிறது. மேலும், தனது அந்தஸ்தை பயன்படுத்தி, உலகிலேயே மூன்றாவது அதிக இஸ்லாமிய ஜனத்தொகையை கொண்டுள்ள இந்தியாவை, இந்தக் கூட்டமைப்பில் பார்வையாளர் நாடாக கூட சேர விடாமல் தடுத்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்து நடைபெறவிருக்கும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் இந்தியா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "57 உறுப்பினர் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், 5 பார்வையாளர் நாடுகள், மற்றும் நட்பு நாடான இந்தியா அதன் சர்வதேச அங்கீகாரம், பலதரப்பட்ட கலாச்சார பெருமைகளுடன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும்" என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கையை இந்திய வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது. மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் இந்த சந்திப்பு அபுதாபியில் நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP