கவுதமாலா: பியுகோ எரிமலை மீண்டும் வெடித்தது!!

கவுதமாலா நாட்டின் பியுகோ எரிமலை நேற்று மீண்டும் வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

கவுதமாலா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள  பியுகோ என்னும் எரிமலை  கடந்த ஞாயிற்று கிழமை  தீடீர் என்று வெடித்து சிதறியது. இதில் 6  பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. எரிமலையால் சேதமடைந்துள்ள கிராமங்களில் இருந்து மீட்பு பணியாளர்கள் அதிக உடல்களை மீட்டு வருகின்றனர். எரிமலையில் இருந்து 10 கி.மீட்டர் உயரத்துக்கு வானில் கரும் புகை பரவியதை தொடர்ந்து, அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகள், வாகனங்கள், மரங்கள் போன்றவை சாம்பலால் மூடப்பட்டுள்ளன. 

இதனை தொடர்ந்து அப்பகுதியில், மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று மீண்டும்   எரிமலை வெடித்தது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் இதுவரை 190 பேர் காணாமல் போயுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.          
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP