நைஜீரியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 71 பேர் பலி

நைஜீரியாவில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 70யைத் தாண்டியுள்ளது.
 | 

நைஜீரியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 71 பேர் பலி

நைஜீரியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 71 பேர் பலி

நைஜீரியாவில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 70ஐ தாண்டியுள்ளது. 

ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடான நைஜீரியாவில் முபி எனும் இடத்தில் உள்ள மசூதியில் நேற்று தீவிரவாதி ஒருவன் உள்நுழைந்து குண்டுகளை வெடிக்கச் செய்தான். அதிலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில் அடமாவா மாவட்டம் யோலோ(Yolo) எனும் இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இந்த இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் முதலில் பலியானோர் எண்ணிக்கை 24 என கூறப்பட்டது. இதையடுத்து தற்போதைய நிலவரப்படி, பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குலை போஹோ ஹராம் தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP