'அந்த நாயின் தலையைக் கொண்டு வா' - ஸ்கைப்பில் சவுதி இளவரசர் ஆணையிட்டதாக தகவல் 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை படுகொலை செய்து அவரது தலையை கொண்டுவர வேண்டும் என்ற ஆணையை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஸ்கைப் மூலம் ஊடக ஆலோசகருக்கு உத்தரவிட்டதாக துருக்கி அளித்த தகவலை அரபு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
 | 

துருக்கி அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் அரபு ஊடகங்கள் இந்த திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளன. சவுதி இளவரசர் அவரது அரசின்  துறையில் பல பதவிகள் வகிக்கும் ஊடகத் துறை ஆலோசகரான அல் கவுடானி மூலம் இந்த உத்தரவை வழங்கியதாக அந்த செய்தி கூறுகிறது. 

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்ற 15 பேருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ஊடகத்துறை ஆலோசகரான அல் கவுடானிதான் ஜமாலைக் கொல்ல உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 

''அவரின் தலையைக் கொண்டு வா'' எனக் கூறும்படியான அல் கவுடானியின் குரல் ஆடியோவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த உத்தரவை இளவரசர் சல்மான் ஸ்கைப் மூலம் தெரிவித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கப்பட்ட அல் கடானி , ''நான்  யாருடைய அனுமதி இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.  நான் எனது கடவுளான அரசர் சல்மானுக்கு இளவரசர் முகமது பில் சல்மானுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்'' என்று தெரிவித்தார்.

இந்த ஆடியோ ஆதாரத் தகவலை தற்போது துருக்கி வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஜமால் கொலை தொடர்பாக  கடந்த சனிக்கிழமை சவுதி அரசர் சல்மான்,  இளவரசரின் ஊடக ஆலோசகர் அல் கடானி உட்பட நான்கு பேரைப் பதவியிலிருந்து நீக்கியது.  மேலும் சவுதி அரசோ ஜமால் கொல்லப்பட்டதில் இளவசரருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பான நியாயமான விசாரணை நடந்து வருவதாகவும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP