துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய பயங்கரவாதி!

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் முக்கிய நபர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் எனவும் அந்நாட்டு வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 | 

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய பயங்கரவாதி!

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் முக்கிய நபர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் எனவும், அந்நாட்டு வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் மசூதிக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 49 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக நியூசிலாந்து காவல் துறை 4 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'பிரண்டன் டோரண்ட்' என்பவரும் ஒருவர் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றவர் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உறுதி செய்துள்ளார். மேலும் இவர், ஆஸ்திரேலிய 'வலதுசாரி பயங்கரவாதி' என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதை அந்த பயங்கரவாதி பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளான். இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP