கத்தார் விசாவில் அதிரடி மாற்றம்... இந்தியர்கள் குஷி!

கத்தாரில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள், தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற்றுவிட்டு தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய விதியை நீக்கி அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது அந்நாட்டு அரசு.
 | 

கத்தார் விசாவில் அதிரடி மாற்றம்... இந்தியர்கள் குஷி!

கத்தாரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற்றுவிட்டு தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய விதியை நீக்கி, அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது அந்நாட்டு அரசு.

கத்தார் நாட்டில் 2022ல் கால்பந்து உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. யாருமே எதிர்பார்க்காமல், சர்ச்சைக்குரிய முறையில் கால்பந்து உலகக் கோப்பையை நடத்த கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல ஃபிபா அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கப்பட்டதாக ஃபிபா-வின் முன்னாள் தலைவர் செப் ப்ளாட்டார் தெரிவித்திருந்தார்.

கத்தாரில் வேலை செய்யும் தொழிலாளிகளை அடிமைகள் போல நடத்துவதாகவும், கடினமான பாதுகாப்பில்லாத நிலைமையில் நீண்ட நேரம் வேலை செய்து பல தொழிலாளிகள் பலியாகியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதில் இந்தியா மற்றும் நேபால் நாடுகளை சேர்ந்த தொழிலாளிகள் அதிக அளவில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்தார் உலகக் கோப்பைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச அளவு எழுந்த எதிர்ப்பால், தனது விசா முறைகளில் மாற்றங்களை கொண்டு வர கத்தார் ஒப்புக்கொண்டது. 

முக்கியமாக, சர்ச்சைக்குரிய கஃபாலா எனப்படும் ஸ்பான்சர் முறை மூலம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது முதலாளிகளின் உரிமையோடு தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதி இருந்தது. தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகளை வைத்துக் கொள்ளும் முதலாளிகள், இந்த விதியை பயன்படுத்தி, தொழிலாளர்களை அடிமைகள் போல நடத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன. தற்போது அதை நீக்கி, முதலாளிகளின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு செல்லலாம் என தெரிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

இது இந்தியர்கள் உட்பட அங்கு வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP