எரிமலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலி, 20 பேர் படுகாயம். 

கவுதமாலா தலைநகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 | 

எரிமலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலி, 20 பேர் படுகாயம். 

கவுதமாலா தலைநகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

கவுதமாலா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள  பியுகோ என்னும் எரிமலை வெடித்து சிதறும் நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு, அப்பகுதி மக்களை வேறு பகுதிகளுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. 
இந்நிலையில், நேற்றிரவு தீடீர் என்று வெடித்து சிதறியது. இதில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது.  இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், எரிமலை வெடிப்பை பார்த்து கொண்டு இருந்த இரு சிறுவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP