தினம் 5 மணி நேர போர் நிறுத்தம்; சிரியாவுக்கு புடின் கட்டளை

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் மனிதாபிமான பாதைகள் அமைக்க தினமும் 5 மணி நேர போர் நிறுத்தம் ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புடின் கட்டளை விதித்துள்ளார்.
 | 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து ரஷ்யா இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) முதல் இந்த நடைமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தப்பி செல்வதற்கான பாதைகளை அமைக்க சிரியா செம்பிறைச் சங்கம் உதவும் எனவும் மக்களுக்கு இது குறித்த தகவல்கள் துண்டுச் சீட்டுகள் மூலமாகவும், குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்கள் மூலமாகவும் செய்திகள் அனுப்பப்படும் என்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லேவ்ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலைநகர்  டமாஸ்கஸ் அருகில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் 393,000 பொதுமக்கள் சிக்கியுள்ளனர். இந்த பகுதியில் ரஷ்யாவின் ஆதரவோடு அரசு படைகள் தீவிர தாக்குதல் நடத்துகிறது. 

கடந்த 8 நாட்களில் 560 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் ஒன்று தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP