ஈராக்கில் ஆயுதக்கிடங்கு வெடித்ததில் 18 பேர் பலி!

ஈராக்கில் மசூதி அருகே ஆயுதக்கிடங்கு வெடித்ததில் இதுவரை 18 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.
 | 

ஈராக்கில் ஆயுதக்கிடங்கு வெடித்ததில் 18 பேர் பலி!

ஈராக்கில் மசூதி அருகே ஆயுதக்கிடங்கு வெடித்ததில் இதுவரை 18 பேர் வரையில் பலியாகியுள்ளனர். 

தலைநகர் பாக்தாத்தில் சதர்(Sadr) மாவட்டத்தில் உள்ள ஷியா மசூதி அருகே ஆயுதங்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது.நேற்று இரவு ஆயுதக்கிடங்கில் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் முதற்கட்டமாக 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 90க்கும் அதிகமானோர் இதில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அருகில் இருந்த வீடுகள் பல சேதமாகியுள்ளன. இதையடுத்து வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP