அமெரிக்க வான்வழி தாக்குதலில் சிரிய படைகள் 100 பேர் பலி

அமெரிக்க வான்வழி தாக்குதலில் சிரிய படைகள் 100 பேர் பலி
 | 

அமெரிக்க வான்வழி தாக்குதலில் சிரிய படைகள் 100 பேர் பலி


சிரியாவின் டெயிர் எஸ் சோர் நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியா நாட்டின் அரசு படைகளை சேர்ந்த சுமார் 100 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. 

அமெரிக்க தரப்பில், தங்கள் மீது காரணமில்லாமல் சிரியா படைகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே கூட்டு படைகள் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளது. 

"யூப்ரேட்ஸ் ஆற்றுக்கு அருகே, கிளர்ச்சியாளர்கள் படை மீது சிரியா அரசு படைகள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்குமாறு, கிளர்ச்சியாளர்ளுடன் சேர்ந்து கூட்டு படைகள், வான்வழியாகவும் தரை வழியாகவும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது" என அமெரிக்க ராணுவத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிரிய அரசோ, அமெரிக்கா சொல்வது பொய் என குற்றம் சாட்டியுள்ளது. தங்களது படைகள் ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை தான் குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக குர்து படைகளை அதிகம் கொண்ட கிளர்ச்சியாளர்கள் மீது சிரியா அரசு படைகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. ஐ,எஸ் தீவிரவாதிகளை குறிவைப்பதாக கூறி, ஐ.எஸ்-க்கு எதிராக போரிட்டு வரும் குர்து படைகளை  சிரிய ராணுவம் பலமுறை தாக்கியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP