பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகராக இந்து பெண் எம்.பி!

பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினரான இந்து பெண்மணி கிருஷ்ண குமாரி கோலி, நேற்று பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, செனட் சபை சபாநாயகராக ஒரு நாள் பணியாற்றினார்.
 | 

இந்து தலித் சமூகத்தை சேர்ந்த பாகிஸ்தான் பெண்மணி கிருஷ்ண குமாரி கோலி, பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டு, கடந்த ஆண்டு நாடாளுமன்ற மேல் சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 39 வயதான கோலி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு உள்ளிட்டவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 

நேற்று சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, பாகிஸ்தான் செனட் சபையின் ஒரு நாள் சபாநாயகராக கிருஷ்ண குமாரி கோலி பணியமர்த்தப்பட்டார். "செனட் சபையின் சபாநாயகர், பெண்கள் தினத்தை முன்னிட்டு நமது சக உறுப்பினர் கிருஷ்ண குமாரி கோலியை சபாநாயகராக அமர்த்த முடிவெடுத்துள்ளார்" என்று செனட் உறுப்பினர் பைசல் ஜாவேத் ட்விட்டரில் எழுதினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP