கிரீஸில் காட்டுத்தீ: சுற்றுலா பகுதியில் 50 பேர் தீயில் சிக்கி பலி 

ஏதென்ஸ் கடற்கரையை ஒட்டிய கிரீஸ் வனப் பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடெங்கிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் சர்வதேச நாடுகளின் உதவியை கிரீஸ் கோரியுள்ளது.
 | 

கிரீஸில் காட்டுத்தீ: சுற்றுலா பகுதியில் 50 பேர் தீயில் சிக்கி பலி 

ஏதென்ஸ் கடற்கரையை ஒட்டிய கிரீஸ் வனப் பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நாடெங்கிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் சர்வதேச நாடுகளின் உதவியை கிரீஸ் கோரியுள்ளது. 

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் கடற்கரையையொட்டி அட்டிகா மாகாண வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இரண்டு இடங்களில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. காற்றின் வேகம் தீவிரமாக இருப்பதால் தீப்பற்றி தீவிரமடைந்தது. 

இந்த நிலையில் ஏதென்ஸ் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக உள்ள ரிசார்ட்டுகள், வீடுகளை காட்டுத்தீ பரவி அதன் சுவடே இல்லாமல் செய்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் சாதூர்யமாக செயல்பட்டும் தீயின் கடும் தாக்கத்தால், பின்னடவை எதிர்கொண்டிருக்கிறது. காட்டுத்தீயில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 26 பேரின் உடல்கள் மட்டும் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமானோர் தீக்காயம் அடைந்துள்ளனர்.   

இதனை தொடர்ந்து கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது போஸ்னியா நாட்டுக்கான சுற்றுப் பயணத்தினை ரத்து செய்துள்ளார்.  கிரீஸில் ஏதென்ஸ் அருகே போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  பொது மக்கள் பலரும் உயிரைக் காக்க வேறு இடங்களுக்கு தஞ்சம் தேடி தப்பியோடியுள்ளனர். 

தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணிக்கு விமானங்கள் அளிக்க உதவிக் கோரப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சி மிகப் பெரிய சவால்களுக்கு இடையே நடந்து வருகிறது. 

சுமார் 100 வீடுகள் மற்றும் 200 வாகனங்கள் தீயில் எரிந்து கருகியுள்ளதாக மேயர் அறிக்கை அளித்துள்ளார்.  இதனால் நாடு முழுவதிலும் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP