தேர்தல் குளறுபடியில் ஈடுபட்டதா பேஸ்புக்? - ஐரோப்பிய நாடாளுமன்றம் விசாரணை

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற ஆய்வு நிறுவனம், சுமார் 5 கோடி பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களது அனுமதியில்லாமல் பெற்ற விவகாரத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம் மார்க் ஜுக்கர்பர்க் வாக்குமூலம் கொடுக்க அழைப்பு விடுத்துள்ளது.
 | 

அமெரிக்க அதிபர் தேர்தலில், வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் பேஸ்புக்குடன் இணைந்து ஒரு ஆப் உருவாக்கியது. அந்த ஆப்பை பயன்படுத்துபவர்களுடைய விவரங்களை சேகரித்து, அதை வைத்து அவர்களின் ஆர்வங்கள், அரசியல் நம்பிக்கை, பொருளாதார கண்ணோட்டம் ஆகியவற்றை தெரிந்துகொண்டு, பேஸ்புக் மூலம் அவர்களுடைய கணக்குகளுக்கு ட்ரம்புக்கு ஆதரவான விளம்பரங்களை அனுப்புதல், எதிர்க்கட்சி வேட்பாளரை பற்றிய தவறான செய்திகளை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் அந்த ஆப்பை பயன்படுத்துபவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய நண்பர்கள் அத்தனை பேரின் தனிப்பட்ட விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா. இதுபோல சட்டவிரோதமாக 5 கோடி பேரின் தனி விவரங்களை அந்த நிறுவனம் சேகரித்தது தெரிய வந்தது. 

தேர்தல் குளறுபடியில் ஈடுபட்டதா பேஸ்புக்? - ஐரோப்பிய நாடாளுமன்றம் விசாரணை

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த விவரங்களை அழிக்க வேண்டும் என பேஸ்புக் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இன்று வரை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா அந்த விவரங்களை தன் வசம் வைத்துக் கொண்டுள்ளதாக அதில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  அந்த விவரங்களை மற்ற நிறுவனங்களிடம் விற்கவும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா முயற்சி செய்ததாக கூறினார். 

பிரிட்டன் நாட்டில் இயங்கி வரும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் மீது, அந்நாட்டு இதுகுறித்து  தொலைத்தொடர்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் பேஸ்புக் நிறுவனம் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால்,பங்குகள் இரு தினங்களுக்கு முன் வரலாறு காணாத சரிவை கண்டன. 

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், இந்த விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

"மார்க் ஜுக்கர்பர்க்குக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். 50 கோடி ஐரோப்பிய மக்களின் இணைய விவரங்களை கொண்டு பேஸ்புக் நிறுவனம், தேர்தல் குளறுபடிகளில் ஈடுபட்டு ஜனநாயகத்தை கலைக்க பார்க்கிறதா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்" என ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP