கேட்டலான் தலைவரை கைது செய்ய வாரண்ட் மறுப்பு: ஸ்பெயின் உச்ச நீதிமன்றம்

கேட்டலான் தலைவரை கைது செய்ய வாரண்ட் மறுப்பு: ஸ்பெயின் உச்ச நீதிமன்றம்
 | 

கேட்டலான் தலைவரை கைது செய்ய வாரண்ட் மறுப்பு: ஸ்பெயின் உச்ச நீதிமன்றம்


தனி நாடு என அறிவிப்பு வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய கேட்டலோனியா மாகாண தலைவர் கார்லஸ் பிக்டமான்ட்டை கைது செய்ய ஐரோப்பிய வாரண்ட் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தது ஸ்பெயின் உச்ச நீதிமன்றம்.

ஸ்பெயின் நாட்டில் இருந்து கேட்டலோனியா மாகாணத்தை பிரிக்க பல ஆண்டுகளாக நடந்து வந்த போராட்டம், கடந்த வருடம் அரசியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கேட்டலோனியா மாகாணத்தை தனி நாடக அம்மாகாண அரசு அறிவித்தது. இதற்கு ஸ்பெயின் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஸ்பெயின் மத்திய அரசு, கேட்டலோனியா அரசை கலைத்தது. 

இந்த இயக்கத்துக்கு முக்கிய காரணமாக விளங்கிய கேட்டலான் மாகாண தலைவர் கார்லஸ் பிக்டமான்ட், பெல்ஜியம் நாட்டிற்கு சென்றார். அவரை கைது செய்து ஸ்பெயினுக்கு கொண்டு வர, ஐரோப்பிய வாரண்ட் பிறப்பித்து ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், பெல்ஜியம் நாட்டின் சட்டத்தில், ஸ்பெயின் பிறப்பித்த வாரன்டில் இருந்த குற்றச்சாட்டுகள் இல்லாததால், அவரை கைது செய்ய முடியாமல் போனது. அந்த வாரண்டை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், பிக்டமான்ட் நேற்று டென்மார்க் சென்று அங்குள்ள ஒரு விழாவில் கலந்து கொண்டார். 

இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய ஸ்பெயின் நாட்டு அரசு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வாரண்ட் கோரினர். ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP